Wikipedia

Search results

Monday 19 June 2023

காதலா?

 'யாருனே தெரியாம ஒரு நபர நாம வாழ்க்கையில எதிர்பாராத விதமா சந்திக்கிறோம். திடிர்னு அவங்களோட அந்த பிரசன்ஸ் ஒரு magic மாதிரி நம்மல மாத்தி விட்ருது. அவங்க கூடவே வாழ்க்கை முழுவதும் பயணிக்கனும்னும், உடல் ஊடல் நெருக்கம் அதீத அன்பு என நம்மையே நாம ஏமாத்திக்கிட்டு இருக்கிற நெனப்ப எல்லாத்தையும் உதரிதள்ளிட்டு அவங்கள அவங்களாவே ஏத்திக்கிட்டு ஏதோ ஒரு இடத்தில் இருந்து ஒரு சாயந்திரம் டீ சாப்பிட்ற வேலையில நினைச்சு பாக்கிறது கூட  காதல் தானே மிஸ்டர், இல்ல காதலா தான் இருக்கனும்னு அவசியம் கூட இல்ல, அதுக்கு இந்த மொழில இன்னும் பேர் வைக்காத ஏதோ ஒன்னாக் கூட இருக்கலாம் தானே'.

Monday 24 June 2019

பலூன் 🎈🎈

ஊதி ஊதி விற்கிறார்
பலூன்காரர் வீதியெங்கும்
பச்ச கலர் ஒன்று
இளஞ்சிவப்பு கலர் ஒன்று
மஞ்சள் ஒன்று என்று
ஒவ்வொன்றிலும்
அவரின் மூச்சுகாற்று
தேங்கி நிற்கிறது.
விலை ஒன்றும் பெரிதல்ல
அதிலுள்ள நினைவுகளை
தேடி பார்க்கும் பொழுது.
சிறு மூச்சுகாற்றில்
மொத்த பால்யத்தையும்
உள்வைத்து கொண்டிருக்கும்
பலூன் இன்றும் வெடிக்காமல்
இருப்பது தான் அந்த கிழவனின்
மூச்சு காற்று செய்வித்த
அதிசயம்.

Tuesday 14 October 2014

பறவைக்கும் டைம் பார்க்க தெரியும் !

வழக்கம் போல் டைடல் பார்க் சிக்னலில் நின்று கொண்டிருந்த நான் திடீரென மேலே பார்க்க ஆங்கில 'v' வடிவம் போல சில வெள்ளை நிற பறவைகள் பெயர் தெரியவில்லை, என்னை கடந்து சென்றது. அன்றிலிருந்து நான் அந்த சிக்னலை அடைய முன் பின் ஆனாலும் சரியாக நான் நிற்கும் பொழுது அந்த பறவைக் கூட்டம் 6.30 முதல் 6.45க்குள் கடந்து அல்லது எனக்கு தரிசணமளித்து செல்கிறது.அந்த பல தொழில்துறைகளை சார்ந்த மக்களும் வீடுகளுக்கும் வீட்டில் இருந்து அலுவகங்களுக்கும் செல்ல ஆயத்தமாகிற மிக நெருக்கடி நேரமான அந்த மாலை 6.30 மணிக்கு அத்தனை வண்டியின் ஒலிகளுக்கும் இருளின் மங்கிய கருப்பின் ஒளிகளுக்கும் பச்சை ஒளியினை பார்க்க உற்று நோக்கி கொண்டிருக்கும் வண்டிகளின் பின் தெரியும் சிவப்பு ஒளிகளுக்கும் இடையில் நான் வான் பார்க்க காரணமான அந்த வெள்ளை ஒளி மட்டும் என்னை வெறும் பச்சை ஒளியினை மட்டும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் மனிதர்களின் நடுவில் தனிமைபடுத்தி காட்டுகிறது.

ஆம் ரசனையற்ற சில தருணங்களில் ஒரு கண்ணாடி கோப்பையினுள் உட்கார்ந்து ரசனையில் மூழ்கி போக தான் பிடிக்கிறது எனக்கு.
சில தருணங்களில் நான் உற்று நோக்கிக்கொண்டிருப்பதை மற்றவர்கள் வெறித்து பார்க்கிறேன் என்கிறார்கள் நானோ உண்மையில் ரசித்துக்கொண்டிருக்கிறேன்.

ஒரு கிழிந்த ஆடையினுள் ஒளிந்துக்கொண்டிருக்கும் சிறுவனின் மீது,
பரட்டை தலையுடன் உட்கார்ந்துக்கொண்டிருக்கும் ஓர் கிழவனின் மீது, குப்பை தொட்டியை கிளறிக் கொண்டிருக்கும் தெரு நாய் மீது, 
பெட்ரோல் வாசனையிலும், 
புதிய வண்ண கலவையிலும், 
புதிதாய் அச்சடிக்கபட்ட புத்தகத்திலும், 
எரிந்து போன காகிதங்களிலும், ஒளிந்திருக்கிறது 
என் ரசனை .
ரசனைக்கு ஏது இடம்,பொருள்,ஏவல் எல்லாம் ?
முதலில் ரசிக்க பழகுங்கள் பின்பு ருசி தானாக தலைக்கொடுக்கும்.
அனைவரின் ரசனை வேண்டுமானாலும் அந்த சிக்னல் விளக்கில் தெரியும் பச்சை ஒளியாக இருக்கலாம் என்னுடைய ரசனை முற்றிலும் அந்த சிகப்பு ஒளியின் மீது தான் இருக்கும்,
நீங்கள் அனைவரும் அந்த நெருக்கடியில் சிக்கி அனைவரையும் திட்டி, வசை பாடி நகருங்கள், நான் எனக்காக சரியான நேரத்திற்கு வரும் அந்த வெள்ளை ஒளி பறவைகள் என்னை கடக்கும் வரை நிதானித்து ரசித்து விட்டு தான் நகருவேன்.
ஏனென்றால் அந்த பறவைகளுக்கு டைம் பார்க்க தெரியும் நான் வரும் டைம் எனக்கும் தான்!

ஆம் அனைவரின் நடுவிலும் ஒரு பைத்தியகார வாழ்க்கை வாழ ஆசை பட்டு தான் கொண்டிருக்கிறேன் நான்.

ஓர் காதல் ஆசை!



தீடிரென ஓர் காதல் ஆசை இது காமத்தின் கதறல் அல்ல ஒரு பெண்ணை உருகி உருகி காதலிக்க ஆசை,அந்த பெண் வேறு ஒருவனை காதலிக்கிறாள் அதுவல்ல என் பிரச்சனை அவளுக்கு நான் யாரென்று கூட தெரியாது அதுவுமல்ல என் பிரச்சனை, அவள் ஓர் அதிகாரம், அவள் கருப்பின் அழகு, அவள் பிரபஞ்சத்தின் நிழல் என்னுடைய பிரச்சனையெல்லாம் அவள் வார்த்தைகளால் காதலித்து விட்டு போ என சொன்னால் போதும் அவளை காதலிக்க நான் தயாராக இருக்கிறேன் அவளின் அனுமதி அல்லா காதல் என்னவோ எனக்கு பிடிக்கவில்லை, ஆனால் எந்த மாதுவினால் சொல்ல முடியும் என்னை காதலித்துவிட்டு போவென ? ? ?

Tuesday 12 November 2013

வீடு - அத்தியாயம் 2

இந்த வீட்டுக்கு என தனி ரகசியமே உள்ளது ஒருமுறை வசித்தீர்களானால் மீண்டும் வர தூண்டக்கூடிய ஒரு பிரசித்தி பெற்ற மாய மந்திர உலகம் இன்னும் கொஞ்ச நாளில் எங்கள்ல ஒருத்தனே அங்க சாமியாராக மாறி மாமியார் வீட்டிற்க்கு செல்ல வாய்ப்பிருக்கிறது. அந்த இடத்தை இரவு புகைக்க ஒதுங்குவதற்க்கும், தண்ணீரில் மிதப்பதற்க்கும் அனைவரும் பயண்படத்துக்கூடிய இடம். அது ஒரு சிறிய தெரு யாரும் அவ்வளவு எளிதில் கண்டுக்கொள்ளாத ஒரு தெரு, அத்தெருவில் பூங்காவும் பூங்காவை தாண்டி இந்த இடுகாடும் அமைந்துள்ளது.வீடே இல்லாத அந்த தெருவுக்கு பெயர் வைத்தவன் கண்டிபாக ஒரு சிறந்த மனிதனாகவே இருப்பான். யாருக்குத் தெரியும் அனைவருக்கும் இடுகாடாக தெரியும் அது எங்களுக்கு வீடாக அமையும் என சைவ சிந்தாந்த முனிவர் குள்ளமாக காட்சி அளிக்ககூடிய அகத்தியர் நாடி ஜோசியம் பார்பவனாக கூட இருந்திருக்கலாம். நாடி ஜோதிடர்கள் தானே நடப்பதை முன்க்கூட்டிய கூற கூடியவர்கள். நடப்பது என்பது நாளைக்கு மாடு நடக்கும் நாளைய மறுநாள் ஆடு நடக்கும் என்பத்தல்ல.

வீடு எனும் இக்கூட்டுக்குள்ளே இருக்கும் சிலருக்கு தெய்வ நம்பிக்கை பரவலாக கிடையாது சாமி கண்ணை குத்தும் என சொன்னால் கண்ணை மட்டுமாமாமா என கேட்க்கும் கேளிப்புடையவர்கள் இவர்கள். இககூட்டில் இருக்கும் அனைத்து ஹைக்கூவும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் அல்ல ஒரே கல்லூரிக்கு சென்றவர்கள் அல்ல.ஒரே ஏரியாவில் பல வருடங்களாக வசிக்கும் பாரம்பரியம் இவர்கள். இரயில் சினேகிதம் பொன்றதல்ல இவங்க நட்பு ரயில் போன்றது வெவ்வேறு பெட்டியாக இருந்தாலும், ஒன்றாக எப்பொழும் சென்றடையும் டெஸ்டினேஷன் ஒன்னவே இருக்கும். காதல் நட்புல இருக்கும் நட்பு காதல்ல இருக்கும் ஆனா காதல் விட்டாலும் நட்பு விடவே விடாது விட்டுமட்டுமே கொடுக்கும்.

காசு பணம் வந்தா மட்டும் இல்ல காதல் வந்தாலும் காக்கா கூட வெள்ளையாகிடும், அட சத்தியமா தான் சொல்றேன் இந்த காதல்ன்றது ஒரு மாதிரியான பீலிங் அந்த காதல்ல அடி பட்டவங்களுக்கு இந்த வீட்டுல பஞ்சமில்லைன்னு சொல்லலாம். ஆமா தோத்த காதல், செத்த காதல், வாழுர காதல், வழுக்கி விழுந்த காதல், வந்த காதல், போன காதல், போண்டியான காதல், பொண்டாட்டியான காதல்ன்னு அனைத்து காதலோட ஒருமித்த முகத்த ஒவ்வொருத்தர்க்கிட்டயும் பார்க்க முடியும்

பார்க்கறது மட்டும் இல்ல அவங்கள உத்து பார்த்தா அந்த காதலோட தழும்பு ததும்பும். இவர்களோட வாழ்க்கை எப்படி போகப்போதுன்றது ஒரு கேள்விக்குறியே.... (?) வாழ்க்கைல பல கேள்விகளுக்கு பதிலே கேள்விக்குறி தான அப்புறம் வாழ்க்கையில கேள்விக்குறி வந்தா என்ன தப்பு. தப்பேயில்ல அது தவறு, தெரிந்து பன்றது தான் தப்பு எங்களுக்கு தெரியாம எங்க வாழ்க்கையில கேள்விக்குறி வச்ச அந்த பிரம்மன்னுக்கு இதுல பெரிய பங்கு இருக்கு எங்களுக்கு தெரியாம வச்சதுனால அது தவறா மாறிடுச்சு.

கேள்விக்குறியா இருக்குற வாழ்க்கையில முற்றுப்புள்ளி வச்சா அவங்க வர்ற இடம் எங்க வீடா தான் இருக்கும் அந்த வீடு முழுசா தூங்கிட்டு இருக்குற யாரையுமே எழுப்ப முடியாது ஆன எங்க கிட்ட சொன்னா வெள்ளக்குமார் அண்ணகிட்டயோ சண்முக அண்ணகிட்டேயோ இல்ல ஜோதி அக்காகிட்டயோ உடனே நீங்க சொல்றத சேத்துடுவொம் இத்தன வருஷமா உட்க்காறதுக்கு நாற்காலியாவும் படுக்குறதுக்கு மெத்தையாவும் அவங்க எடம் தான உதவுச்சு அதுக்காக இந்த உதவிக்கூடவா செய்யமாட்டோம்.

சண்டை சச்சரவு இல்லாத வாழ்க்கை ரொம்பா போர் அடிக்கும் எங்களுக்குள்ளயும் சண்ட வரும் ஆன அடிதடியா மாறது ஏன்னா அவ்வளவு பஞ்சு போன்ற மென்மையான மனசு எல்லாருக்கும் (தயவு செய்யது பான்ப்ராக் முகேஷ் விளம்பரத்துல வர்ற வாய்ச வச்சு இத படிக்கவேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப் படுகிறது). நெறைய தடவ மிஸ்அண்டர்ஸ்டேன்டிங் வரும் ஆனா அது அப்பவே மிஸ் ஆயிடும் அவ்வளவு குழந்த மனசு கொண்டவங்க மனசு மட்டுமே. இதுலயும் கோவம்ன்னு எல்லாருமே பட்டாலும் கோவத்துக்கு பேர் போனவங்க ரெண்டு பேரு ஒருத்தன் தங்கமனசுக்காரன் இன்னொருத்தன் கோவக்கா கோமாளி

இவனுக்கு பிறந்ததும் கோவந்திரன்னு பேர் வச்சுருக்கலாம் வாழ்க்கையில கனவுக்கும் பணத்துக்கும் சண்டை நடுவுல மாட்டிக்கிட்டு போராடிகிட்டிருக்கும் ஒருத்தன். கோவத்தாலும் கண்ணீராலும் அதிகம் பேசக்கூடியவன் கோவமும் கண்ணீரும் இவர்களுடன் மட்டுமே காதல்ல கரைஞ்சு நட்ப நல்லா புரிஞ்சுகிட்டவன் வாழ்க்கையிலா எதாவது பண்ணனும்ன்னு அலைஞ்சுகிட்டு இருக்குறான் ஆனா பண்ண வழி தான் தெரியல அவனுக்கான மேடை காத்துக்கிட்டிருக்குன்ற நம்பிக்கையில காலத்த கடத்திட்டுருக்கான் அதிகமா பேசுவான் ஆனாலும் மனசுல அதிகாமா வச்சுக்கமாட்டான் இவனை பொருத்தவரைக்கு இந்த வீடும் நட்பும் இல்லன்னா வாழ்க்கைய எப்பயோ தொலச்சுட்டு வேடிக்கை மனிதனா மாறியிருப்பான் இப்டிலா இருக்குறதாலயும் அடிக்கடி எதாவது கிறுக்குதனம் பன்றதாலயும் சைக்கோன்னு பரவலா அறியபட்டவன்

இவனோட மாமா தான் இந்த வீட்டுல இருக்குற எல்லாருக்கும் மாமா . . .  மாமா மட்டுமில்ல சாமின்னும் பல பேரால் புகழப்பெற்ற தாடிவாலா இவரபத்தி சொல்லனும்னா சொல்ல நெறயா இருக்கு அதுனால அடுத்த அத்தியாயத்துல பாத்துக்கலாம் உங்க மைன்ட் வாய்ஸ் புரியுது அதே அதே அதத்தான் சொல்லபோறன்

தொடரும். . . .


Saturday 9 November 2013

கல்லுமனசுக் காரன்



சும்மா இருந்தவன்ன
சுக்குனூரா ஆக்கிபுட்ட புள்ள
வெட்டியா இருந்தவன 
வெவரமா வளத்துவிட்ட

வீண் வம்பா அலைஞ்வன்
இப்ப வீடு வாசல் தாண்டவில்ல
வீட்டு சாவியக் கூட
உபயோக படுத்த வில்ல

அறும்பு மீசக்காரன்
எறும்பா தேயுராண்டி
இரும்பா திருஞ்சவன்
இப்ப கரும்பா ஆகிபுட்டான்

கல்லு கடை கதியத்தவன்
கல்லு மனசுக்காரன்
இப்ப கல்லா கரையுராண்டி
உன் கள்ள பார்வைபட்டு

கால் கொலுச வாங்க போறான்
அவன் கைகாச செலவு பண்ணி
மனச கொடுத்து புட்டான்
உன் கண்ணசைவு ஒன்னு பட்டு

அவன சேர்க்கை சேத்துபியா
இல்ல செம்மாண்ணா தள்ளுவியா
கம்புசண்ட போட்டவன
ஒன் கம்மலுல மாட்டிப்பியா 

Friday 8 November 2013

விடியல்

அந்த இரவு
இருளின் போர்வைக்குள்ளே
அழுகை அமைதி சோகத்துக்கங்கள்
அனைத்தையும் அள்ளி வாரி
என்னை போர்த்திக்கொண்ட
அந்த இரவின் இருள்,
செய்வதறியா திகைத்து நின்றுக்
கொண்டிருந்த எனக்கு
ஆறுதலாய் இருந்த அந்த இருள்,
பலமுறை அழுதும்
என் கண்ணீரை வெளிச்சம் போட்டு
காட்டாமல் என்னை
போர்த்திக்கொண்டிருந்த
அந்த இருள்,
இன்னும் சற்று நேரத்தில்
விடியலின் வருகையில் கரைய
காத்திக்கொண்டிருந்த நேரம்
என் மனது படபடத்தது 
ஆறுதலாய் இருந்த இருளும்
விட்டுச்செல்ல முற்படுகிறதென

விடியல் மெல்ல மெல்ல இருளை கறைத்துக் கொண்டிருக்க
இருள் என்னிடம் சொல்லிவிட்டு சென்ற
அந்த வரிகள்

"விடியல் எனக்கு மட்டுமல்ல
உனக்கும் தான்". .